|
பொ-ரை: கங்கையாற்றைச் சடையிற் சூடும் மறைக்காட்டுறையும் பெருமானே! ஒரு கூற்றை உமைக்கு ஈந்த இளையவரே! விடையேறிய எம்பெருமானே! இந்த மாறுபாடில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக. கு-ரை: ஆறு - கங்கை. அணி - அழகு. கூறு - உடம்பில் ஒரு பாதி. மாதுஉமை - பெண்ணாகிய உமையம்மைக்கு. குழகர் - இளையர். மாறிலா - ஒப்பில்லாத. முன் மறைகள் அடைத்த நிலையினின்று மாறுதலின்றி உள்ள எனினும் ஆம். |