|
பொ-ரை: வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே! அண்ணலே! ஆதியே! அணிமறைக் காட்டுறையும் பெருமானே! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக. கு-ரை: சுண்ணமும் வெண்பொடியும் எனினும் அமையும்; கலவைச்சாந்தும் திருநீறும் என்பது பொருள். பண்ணி - அலங்கரித்து. அண்ணல் - தலைமையானவன். ஆதி - முதன்மையானவன். திண்ணம் உறுதி. |