|
பொ-ரை: வேதங்களுக்கு நாயகனும், வேதியர்க்கு நாயகனும், உமாதேவியின் நாயகனும், பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும், ஆதிநாயகனும், ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும், பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான். கு-ரை: வேதநாயகன் - வேதங்களின் தலைவன். வேதியர் - வேதம் ஓதுபவர். மாது - பார்வதி. மாதவர் - சிறந்த தவத்தைச் செய்பவர்கள். ஆதிநாயகன் - எல்லார்க்கும் முதன்மையான தலைவன். ஆதிரைநாயகன் - திருவாதிரைநட்சத்திரத்திற்குரியவன். பூதநாயகன் - பூதகணங்களுக்குத் தலைவன். இப்பாடல் தி.5 ப.73 பா.7 ஆம் பாடலோடு ஒத்திருக்கிறது.
|