|
பொ-ரை: வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள்; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர். கு-ரை: எரி - வேள்வித்தீ. உருவருக்கம் - இறைவன் அட்ட மூர்த்தவர்க்கங்களில் தீ ஒன்றாதல். நரி விருத்தமதாகுதல் - நரியின் எண்ணம்போன்று பயனற்றதாதல். "நரிவரால் கௌவச்சென்று நற்றசையிழந்ததொக்கும்". (தி.4.ப.27.பா.5). |