முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 100 - 9 |
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
|
|
|
9 |
|
பொ-ரை: பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர். கு-ரை: அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் மாயன் - திருமால். |
|
|