|
பொ-ரை: விடமுண்டகண்டனும், கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன். கு-ரை: கடு - விடம். ஈடு - வலிமை. விடுக்கண் இன்றி - விடுபடுதற்கு இடன் இன்றாம்படி. வெகுண்டவன் - அருள் செய்யும் நோக்கோடு சினந்தவன். இடுக்கண் - துன்பம். |