|
பொ-ரை: திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத்தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்கநின்றவனும், எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும். கு-ரை: "கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டாவிறலின் விளங்கினார்" (தி.12 பெரியபுராணம். திருக்கூட்டம். 8) என்றமையின் முதலடிக்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. வந்தனையைச் சிவபிரானுக்கே செலுத்தும் எனினும் அமையும். அடித்தொண்டர் அடிமைத் திறம் பேணும் தொண்டர். பாவிக்க நின்றவன், எந்தமையுடையாரது திருமீயச்சூர் இளங்கோயில் சிந்தனை திருத்தும் என முடிக்க. |