|
பொ-ரை: மணம் வீசும் மல்லிகை, கூவிளம், செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடுகொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற்கொண்டு உகந்த பெருமானே! (அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து) கு-ரை: திருமீயச்சூர் இளங்கோயில் ஏறுகொண்டுகந்த பெருமான் அடியார் புனையும் மல்லிகை முதலியவற்றை விரித்த சடையிடை (ஆற்றோடு உடன் அமையக் ) கொண்டுகந்தான் என முடிக்க. |