|
பொ-ரை:வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார், திருமீயச்சூர் இளங்கோயில் செவ்வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை! கு-ரை: 'வண்ணம்' நான்கனுள் மூன்றாவது நிறம் எனப்பொருள்டும்; ஏனையவை இயல்பு என்னும் பொருளில் வந்துள்ளன. சினக்கும் இயல்புடைய நாகம் வெருவும்படி கவ்வும் இயல்புள்ள (அடுத்து நின்ற பொருள்களைப்பற்றி அழிக்கும் இயல்பு) கனலை வீசி ஆடுவர்; அவர் இயல்பு வியக்கத் தக்கதாகவுள்ளது என்பது கருத்து. பகைப் பொருள்களை ஒருங்குடன் கொண்டு அவ்வவை தத்தம் எல்லை கடவாதபடி காக்கும் இயல்பு அவன்றன் இயல்பு என்றபடி. |