|
பொ-ரை: சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும், வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும். கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர். கு-ரை: ஓர் ஆறுகொண்ட சடையினர் தாமும் - ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகிய பெருமான். வேறு கொண்டதோர் வேடத்தராகிலும் - பலவேறு மூர்த்தங்களைக் கொண்டவராக இருந்தாலும் (திருமீயச்சூரிளங்கோயிலில்) கூறு கொண்டுகந்தாளொடு ஏறுகொண்டுகந்தார் - பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். |