|
பொ-ரை: புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும், வேள்வியுளான் என்றும், பூதத்தான் என்றும் கூறுவர்; கீதம் கிளரும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர். கு-ரை: வேதத்தான் - வேதங்களிடையே விளங்குபவன், நூற்றெட்டுப் பெயர்களுள் "கிரிசாயநம" என்பதன் பொருளும் இது. கிரி - வேதத்தின் பரியாயம். வேள்வியுளான் - வேள்வித்தீயில் உள்ளான். என்பர் - என்று சொல்வார்கள். புண்ணியன் - புண்ணிய வடிவினன். கீதத்தான் கிளரும், என்பது எதுகை நோக்கி வலித்து நின்றது. கிளரும் - விளங்கும். ஏதம் - துன்பம். |