|
பொ-ரை: தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும். கு-ரை: வேதம் ஓதும் - வேதத்தை அருளிய, அல்லது வேதத்தால் ஓதப்படும். புனிதன் - தூயன்; நின்மலன். ஏதம் - துன்பம். |