|
பொ-ரை: மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான், என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும், மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள். பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி. கு-ரை: விண்ணை விண்டு - வானூடு அன்னமாய்ப் பறந்து சென்று. மொண்ணை - முரண்டலை உடையை என்பது போலும். மொய்குழல் - செறிந்த கூந்தலினை உடைய என்மகள். பண்ணையாயம் - விளையாடும் தோழியர். பயிலும் - சொல்லிக் கொண்டிருக்கும். இப்பாடல் அகத்துறைப் பொருளமைந்தது. செவிலி கூற்று. |