|
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர்; மழுவாளை உடையார்; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர்; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர். கு-ரை: மற்றையார் - மெய்யன்பர் அல்லாதவர். மழுவாள் - மழுவாகிய வாள். பற்றி - பிடித்து. ஆட்டி - ஆடச் செய்து. ஐந்தலைப் பாம்பைக் கையில்பற்றி ஆட்டுவர்; இடுப்பிலும் சுற்றிக் கொள்வர் என்க. மகாமாயை என்னும் குண்டலிசத்தியை ஆள்பவர் என்றபடி. தூநெறி - அவா அறுக்கும் முத்திநெறி (தூஉய்மை என்பதவாவின்மை. திருக்குறள். 364.) அந்நெறி நிற்பார்க்குப் பேரின்பமாய் முறுகித் தோன்றும் பெற்றியர் என்க."இன்பம் இடையறா தீண்டும்" என்னும் திருக்குறளோடு (369) ஒப்பிடுக. |