|
பொ-ரை: வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன்; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான்; காலன் அஞ்சும்படி உதைத்தவன்; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன். இப்பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம். கு-ரை: வஞ்சனை (யைச்) சூல வல்ல எம் சுந்தரன் - என மாறுக. சூலுதல் - தோண்டுதல், களைதல். அடியரை வஞ்சிப்பார் செய்யும் வஞ்சனைகளைக் களையவல்லவன் என்றபடி; இது நாவுக்கரசரது அனுபவம். கோலமா அருள் செய்தல் - பக்குவர்க்குத் தன் திருமேனி காட்டி ஒப்பற்ற சிவஞானத்தை விளங்கச்செய்தல். கண்டம் இருள் ஆம் வேலை நஞ்சு என்க. வேலை - (பாற்) கடல். |