|
பொ-ரை: நல்லவினை, விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை, சொல்வடிவானவனை, ஒளியை, சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை, திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது. கு-ரை: நல்லன் - நன்மையே வடிவானவன். திகழ் - விளங்குகின்ற. ஓதியை -ஓதியவனை. சொல்லனை - சொல் வடிவானவனை. சுடரை - ஒளி வடிவானவனை. சுடர்போல் ஒளிர் கல்லன் - சூரியன் போல ஒளிவிடும் வெள்ளிப் பனிமால்வரையை இருப்பிடமாகக் கொண்டவன். கல் - மலை. கடி-விளக்கம். அல்லது காவல். மா - பெரிய. வில்லன் - திரிபுரமழிக்க எடுத்த இமயவில்லை உடையவன். |