|
பொ-ரை: சடை உடையவனை, சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை, உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை, பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன். கு-ரை: சரிகோவணம் - இடுப்பினின்று கீழே சரிந்துள்ள கோவணம். ஆடைகொண்டுடையன் - ஆடையாகக்கொண்டவன். உணர்வார் - உணர்பவர். வினை - பழவினைகளை. வாளொடு - மழுப்படையனை என்க. படை - ஆயுதம். மழுவாளொடு பிறபடையும் உடையவர் என்க. பாய்தரும் விடை - பாய்ந்து செல்லும் எருது. |