|
பொ-ரை: திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை, கங்கையாளைச் சடையிற் கொண்டவனை, அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை, திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன். கு-ரை: பொருப்பன் - கயிலைமலைக்குரியவன். புன்சடைமெல்லிய சடையிடத்து. அரும்பனை - அரும்பு அனை எனப்பிரித்து அரும்பை ஒத்த இளந்திங்கள் என்க. திங்களாகிய கண்ணியை உடையவன். பருப்பதம் - அவன் எழுந்தருளிய திருக்கயிலைத் திருமலை. அதனை ஏத்தித் தொழும் தொண்டர்களிடத்து விருப்புடையவன் என்க. ஸ்ரீ பருப்பதம் எனக் கோடலும் பொருந்தும். |