|
பொ-ரை: கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந்துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக. கு-ரை: நங்கை - பார்வதி. நறுஞ்சோதி - நல்லஒளி வடிவினன். பங்கம் - இழிவு. அங்கம் ஓதி - வேதாங்கங்களாகிய சிக்ஷை நிருத்தம் முதலான ஆறு அங்கங்களையும் உலகிற்கு அளித்தவன். உமையொருபாகனை அவன் உறையும் கடம்பந்துறையில் பணிந்தெழுக என்றபடி. |