|
பொ-ரை: திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும், ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே. கு-ரை: பார் - உலகம். அணங்கி - விரும்பி,(அணங்குதல் - விரும்புதல்) வணங்கி - வழிபட்டு. காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாயிருப்பவன். ஆரணங்கு - அரிய தெய்வமாகிய உமையம்மை. மைந்தன் - வலியன். நாரணனும் பிரமனும் நிலமிசை விரும்பி வணங்கிப் பணி செய்திருப்பின் முதல்வனைக் கண்டிருப்பர்; அஃது அறியாது அவர் தேடி எய்த்தனர் எனக்கொள்க. |