|
பொ-ரை: அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும், கணங்கள் வணங்கிவான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும். கு-ரை: கணங்கள் தூயமலர்கள் கொண்டு முதல்வன்றன் அடிவணங்கி என்றும் போற்றிசைக்கும் தலமாகிய திருக்கரக்கோயிலின்கண் அன்புடையார் எல்லாம் மெய்யன்பர்களின் உயரிய குணங்களைப் பாராட்டிப் பிறர்க்கு எழுத்துரைத்தும் தம் குற்றங்களை எண்ணிப் பேசியும் முதல்வனை வணங்கி அவன்றன் பொருள்சேர் புகழ்சொல்லி வாழ்த்துவர் என்க. கணங்கள் - பூதகணங்கள் அல்லது, பதினென் கணங்கள்; விண்ணவரும் மண்மேல் வந்து வணங்குவர் என்பதை அடுத்த பாட்டினும் காண்க. |