|
பொ-ரை: பித்தன் என்ற பெயருடையவனை, இடுகாட்டையே ஆடுமிடமாகக்கொண்ட, இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை, இளம்பிறைசூடியவனை, எல்லாம் வல்லவனை, செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன். கு-ரை: பித்தன் -பேரன்புடையவன். பெருங்காடு - மாப்பேரூழியாகிய சுடலை. அரங்கு - ஆடுமிடம். முத்தன் - பாசத்தினின்றும் விடுபட்டவன். சித்தன் - சித்துருவானவன்; சித்தத்திலிருப்பவன். அட்டமாசித்திகளை அருள்பவன். அத்தன் - தலைவன். |