|
பொ-ரை: நீதியாகவும், நிறைவாகவும், மறைகள் நான்கையும் தந்து பிரமனாதியர்க்கு உபதேசித்தவனாகவும், ஒருவர்க்கும் அறிய வொண்ணாத சோதியாகவும், ஒளி வீசும் செம்பொன்னம்பலத்து ஆதியாகவும் உள்ள பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ. கு-ரை:யை - நீதிவடிவாயிருப்பவனை; "அறவாழி அந்தணன்" என்னும் திருக்குறள் நினைக்கத்தக்கது, நிறைவை எங்கும் நிறைந்தவனை. `மாலறியா நீதிழு, `குறைவிலா நிறைவேழு என்றார் (தி.8) மணிவாசகரும், நான்மறைகளையும் ஒருசேரத்தத்புருஷம் முதலிய நான்கு முகங்களால் வெளிப்படுத்தியவன் ஆகலின் மறையோதியை என்றார். சோதியை-அறிவுக் கறிவாகிய ஒளியை. ஆதி-முதல்வன். |