|
பொ-ரை: நெகிழும் இயல்புடைய ஒளிபொருந்திய அரவத்தொடு, தண்மதி வளர்கின்ற பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது, கிளர்கின்ற பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும். கு-ரை: தளரும் - நெகிழும். வாள் - ஒளி. வளரும் - கண்வளரும் அல்லது வளர்ச்சிபெறும். கிளரும் - விளங்கும். பேரொலி - மிக்க ஒலியையுடைய. கின்னரம் - ஒருவாச்சியம். பாட்டறா - பாடுதலை ஒழியாத. களர் - முல்லைநிலம். முதல்வனை அணைந்தோர் தம்பகைமை தீர்ந்து வாழ்வர் என்பது குறிப்பு. இப்பாடல் பிறிதொரு திருப்பாடலை (தி. 5ப.19.பா.1) ஒத்திருப்பதை ஓர்க. |