|
பொ-ரை: உற்றாராய், உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர் அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்தமுதல்வனார் உறைவிடம் கற்றார்கள், வாழும் கடம்பூர்க் கரக் கோயிலாகும். கு-ரை: உற்றாராய் - உற்றுழி உதவுவோராய்; நமக்குற்றதைத் தமக்குற்றதுபோலக் கருதும் நெருங்கிய உறவுடையவர் என்றபடி. உறவினர் - தூரக்கேண்மையை உடையவர். உயிர்கெலாம் - எல்லா உயிர்கட்கும். பெற்றாராய - தாயும் தந்தையுமாகிய. முற்றார் - அறிவு நிரம்பாதவர். கற்றார் - மெய்ந்நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள். |