|
பொ-ரை: அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும், தன்னடியார் மனத்து அன்பினைஅளப்பவனும். தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொளவேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன். கு-ரை: விளக்கும் - தோன்றச் செய்யும். பிறர் உள்ளத்தில் வேறுபட விளக்கும் என்க. பிறர் - தன்னிடம் அன்பு பாராட்டாதவர். தன்னடியார் மனத்து அன்பினை அளக்கும் என்க. அளக்கும் - உள்ளவாறறியும் என்னைக் குறிக்கொளவேண்டி இளக்கும் என்க. குளக்கும் - தன்னோடு தொடர்பு கொள்ளும். குளக்கும் என்றதைக் குழக்கும் என்பதன் போலியாகக் கொண்டு என்னை வசீகரிக்கும் என்றலும் ஒன்று. |