|
பொ-ரை: அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்றுதான் எடுக்க, உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான். கு-ரை: அன்றுதான் - முன்னொரு காலத்தே தான் என்ற முனைப்போடு. எடுக்க - தூக்க. நன்று தான் நக்கு - நன்மை உண்டாகச் சிரித்து. முப்புரமழித்த சிரிப்புப் போல அழியச் சிரித்த சிரிப்பன்று என்பார் நன்று தான் நக்கு என்றார். கொன்று - வருத்தி. கீதம் - சாமகானம். உறைவது என வருவிக்க. |