|
பொ-ரை: உமைநங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர். அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும், உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன. கு-ரை: நங்கை - மகளிருள் சிறந்தாரை வழங்கும் பெயர். நங்கையாகிய உமையாளுடன் கூடி உறையும் குடமூக்கில் என்க. கங்கை கன்னி - ஏழு தீர்த்த மாதாக்களில் இருவர் (கன்னி - காவிரி). அறுபதம் - வண்டு. தாழ் - மொய்க்கும். அங்கையாள் -அழகிய கையினள். இது ஏனைய தீர்த்த மாதாக்களில் ஒருவரைக் குறிப்பது. இத்தலத்திலுள்ள மகாமகதீர்த்தத்தின்கண் கங்கை முதலிய சப்த்தீர்த்த மாதாக்கள் நீராடித் தூய்மை பெற்றதாகப் புராண வரலாறு கூறுகிறது. |