|
பொ-ரை: பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக! கு-ரை: தொண்டராகி - தொண்டு செய்யும் அடியவராய்.பண்டை வல்வினைப் பற்று - பழவினைகளாகிய பிராரத்தங்களின் பிணிப்பு அற - நீங்க. வேண்டுவீர் - விரும்புவீராய நீங்கள். விண்டவர் - திரிபுரப்பகைவர். ஒரு மாத்திரை - ஒரு கணப்பொழுதில் கொண்டவன் - அழித்தவன். |