|
பொ-ரை: நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும். நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும், நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர்இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும். கு-ரை: நிலையிலா - நிலையற்றவர்களுடைய. வெள்ளை மாலையன் - வெண்ணிறமுடையதாகிய எலும்பு மாலையை அணிந்தவன். கொலைவிலால் - கொல்லும் தொழில் செய்யும் வில்லால். எயில் - திரிபுர மதில்களை கொடியவன் - பகைவர்க்குக் கொடிய வனாயிருப்பவன். நிலையின் ஆர் - நிலைத்த தன்மை பொருந்திய உரையினால் தொழுவார் - தோத்திரிப்பார். ஓயும் - மெலியும். |