|
பொ-ரை : மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன். கு-ரை: புற்றில் வாளரவு - புற்றில் உள்ள ஒளி பொருந்திய நாகம் எனலும் ஆம். பெற்றம் ஏறு - பசுவினமாகிய எருது. மற்றை யாரொடு - நிலவுலகில் வாழ்வோர். கபாலி - கபால மேந்தியவன். |