|
பொ-ரை: நெஞ்சமே! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக! கு-ரை: அன்னங்கள் பலவும் என்க. பன்மலர்மேல் - பல மலர்களின்மீது. துஞ்சும் - உறங்கும். கலவமஞ்ஞை - கலாபத்தோடு கூடிய மயில். காரென - மேகமென்று எண்ணி. வெள்குறும் - நாணமடையும். அன்னங்கள் உறங்கும் பல மலர்களை உடைய பொழிலை, மயில்கள் மேகங்கள் என்றெண்ணிச் சென்று பின் பொழிலென உணர்ந்து நாணும். செறிந்த பொழில் என்க. உலவு - சூழ்ந்த. நிலவினான் - விளங்கினவர் ; நிலவையணிந்தவன். |