பாடல் எண் : 25 - 3
நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.
3
பொ-ரை: பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திர்ப்பாசூர்த்தலத்து இறைவர், மணம்வீசும் கொன்றையும், நாகமும், திங்களும், கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர்; கரியகண்டத்தர்; கையிற்பிடித்த சூலத்தர்.
கு-ரை: நாறு - மணம் கமழ்கின்ற. நாகம் - பாம்பு. காறு - கறுத்த. பாறினோட்டினர் - சிதறுதலை உடைய. (இன அடை) மண்டை ஓட்டை உடையவர் என்றும் கூறலாம். இன்ச - அசை.