|
பொ-றை: பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார்; காதில் வெண்குழை வைத்த கபாலியார்; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார். கு-ரை: அவர் - பாசூர்ப்பெருமான். வேதமோதிவந்து - வேதங்களை ஓதிக்கொண்டு வந்து. இல்புகுந்தார் - வீட்டிற்குள்ளே புகுந்தார். வைத்த - அணிந்த. நீதி ஒன்றறியார் - நீதி சிறிதும் அறியாதவராய். நிறை கொண்டனர் - பெண்களின் நிறை என்னும் குணத்தைக் கவர்ந்தார். பாதி வெண்பிறை - இளம்பிறையைக் கூறும் சொல்வழக்கு. மாதொரு கூறன் ஆதலின் இறைவர்க்கு உரியது பாதி வெண்பிறை ஆயிற்று எனலும் ஆம். |