பாடல் எண் : 26 - 2
செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றாரெரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.
2
பொ-ரை: உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்.
கு-ரை: செங்கண் நாகம் - சிவந்த கண்ணை உடைய பாம்பு. அரையது - இடுப்பின் கண்ணது. ஏந்தி நின்றாராய் எரியாடுபவர் என்க. வார்சடை மேலிடம் கங்கை கொண்டவர் என்க.