|
பொ-ரை: உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக. கு-ரை: இம்மை - இப்பிறப்பு. அம்மை - மறுபிறப்பும், வீடுபேறும். இவ்விரண்டையும் உண்மை என்றறியாது உலோகாயதரும், ஏகான்ம வாதிகளும் பேசுவர். "மறு பிறப்பில்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல்" (பரிபாடல்) அறியாது - தெரியாது. மெய்ம்மையால் - உண்மையோடு. வம்மின் - வாருங்கள். தீர்ப்பர் - வினைதீர்த்து வீடுபேறளிப்பர். |