|
பொ-ரை: வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர். கு-ரை: குணங்கொள் - எண்குணங்களைக் கொண்ட குணமும் தோளும் எட்டாகக் கொள்கின்ற எட்டு மூர்த்தி.. எட்டு என்பதைத் தனித்தனியே கூட்டுக. எட்டுத் தோள் மூர்த்தி - எட்டுத் தோள்களை உடைய பெருமான். எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தங்களை உடையவன். இணையடி - இரண்டு திருவடிகள். இணங்குவார்கட்கு - சேர்பவர்கட்கு. வணங்கி - பணிவுள்ளமுடையவராகி. வைகலும் - நாடோறும். வணங்குவாரது மனத்தார் - மனத்தின்கண்ணே எழுந்தருளுபவர். |