|
பொ-ரை: அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர். கு-ரை: இயலும் - தாமே முதற்பொருள் என்று முரணி நிற்கும். செய்தவம் முயலில் - தவம் செய்து முயலுதற்கண். அம் தாமரை அயலெலாம் அன்னம் மேயும் - அழகிய தாமரை பூத்துள்ள இடங்களின் வயலிலெல்லாம் அன்னங்கள் மேய்ந்து கொண்டிருக்கும். இயல்பு உடைய கயல் பாய்தற்கிடமான வயல்களை உடைய வன்னியூர் என்க. |