|
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும், முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும், வளமையான சுடர்விடுகின்ற நீலநிறமும நீண்ட பளிங்கனைய தம் திருவுருத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர். கு-ரை: மூலவண்ணத்தராய் - உலககாரணராய். முதலாகிய கோலவண்ணம் - ஒடுக்கிய உலகம் முதலியவற்றைத் தம்மிடத்திலிருந்து தோற்றுவிக்கும் தன்மை. கொழுஞ்சுடர் நீலவண்ணத்தர். கொழுவிய மிக்க ஒளியை உடைய நீலமணி மேனியராகிய திருமாலைப் பாகமாக உடையவர். கரிய அகோர முகத்தை உடையவர் எனலுமாம். பளிங்கு - திருவெண்ணீறணிந்ததால் பளிங்குபோன்ற நிறம். ஆலவண்ணத்தர் - கரியர். |