|
>பொ-ரை: இப்பெண், பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும், மேகங்களும், வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே, என் கற்பினையும், உள்ளத்தினையும், பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள். கு-ரை: பெண்ணொடு ஆணாகி - மாதொரு கூறனாகி. அ, சாரியை. நிறை - ஒழுக்கம். நீர்மை - அழகு. அறையும் - வண்டுகள் ஒலிக்கின்ற. பூம்பொழில் - பூவார்சோலை. என்னும் - என்று சொல்லுவாள். |