|
பொ-ரை: உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் மெய்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே! ஐயனே! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின. கு-ரை: வையம் - உலகம். அளந்தானும் - அளந்தவனாகிய திருமாலும். அயன் - பிரமன். மெய்யை - உண்மையான பரம்பொருளை. அழலாயினான் - சோதிவடிவாய்த் தோன்றியவன். ஐயன் - அழகியவனே! அண்மைவிளி. இத்தலைவிக்கு ஐயனே ஆவடு தண்துறையா என்று சொல்லும்போதே கைவளை கழல்கின்றதே என்க. |