பாடல் எண் : 3 - 5
நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5
பொ-ரை: நாம் தொழுவது நெய்யும், நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும், பெருவியப்பும் போல்வானும், தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்க மாவானுமாகிய பெருமானையே.
கு-ரை:நெய் ஒத்தல் - பாலில் நெய்போல் மறைய நின்று உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய முன்நிற்றல், நெய்யூற்றி ஏற்றும் விளக்கில் உண்டாகும் சுடருருவம் போல்வதோர் வடிவத்தை உடையவன்.
ஐ - வியப்பு; `ஐ வியப்பாகும்ழு (தொல் - உரி . 89) கை - ஒழுக்கம்; கைஒப்பானை என்றது அறமே வடிவாகியோன். கை ஒத்தல் - ஒழுக்கத்தோடு ஒற்றுமைப்பட்டு நிற்றல்.