|
பொ-ரை: நாம் தொழுவது நியதி ஆவானும், நியதியின் தலைவனும், விதியாவானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், விச்சுவாதிகளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே. கு-ரை: நெதி - நியதி என்றதன் திரிபு. அது பொருள்கள் காரியப்படும் நிலையில் காணப்படும் மாறுதலில்லாத ஒழுங்குமுறை; இதனை வடநூலார் ருதம் என்பர். நிதி என்ற பாடமும் உண்டு. நெதியின் கிழவன் - இவ்வொழுங்கை உலகத்திற்கு அமைத்து நடாத்தும் தலைவன் என்றபடி. விதி - செய்வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய ஊழ். இதனை மேலை நாட்டார் அற ஆற்றல் (Moral Force) என்பர். அதி - உயிர்களின் உணர்வைக் கடந்தவர், `உலகினை இறந்து நின்றது அவனுருழு - (சித்தி - சுபக்கம், சூத்.1:49.) `விசுவாதிகோ ருத்ரோ மஹர்ஷி:ழு என்பது உபநிடதம். கதி - நெறி. உயிர்களுக்கு நெறிகளை வகுத்தவர் என்பது கருத்து. |