|
பொ-ரை: நாம் தொழுவது, பொன்னும், பொன்னின் சுடர் போன்ற மின்னலும், அன்னையும் ஒப்பானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே. கு-ரை: பொன் ஒப்பானை - `பொன்னார் மேனியனேழு பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி' `நமோ ஹிரண்யபாகவே ஹிரண்யவர்ணாய ஹிரண்ய ரூபாயழு என்னும் உரைகள் காண்க. அன்னை ஒப்பான் என்பது அன்னொப்பான் எனவிகாரப்பட்டு நின்றது. தன் ஒப்பான் - தனக்குப் பிறர் ஒப்பாவதின்றித் தானே ஒப்பாக உள்ளவன். `நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்ழு என்று பின்னும் அருளிச்செய்வர். |