|
பொ-ரை: நெஞ்சே! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும், நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும், பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல் பினரும், தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக! கு-ரை: நல்ல நான்மறை - நன்மையைத் தருவனவாய நான்கு வேதங்கள், தில்லையான் - தில்லையில் எழுந்தருளி இருப்பவன். வல்லையாய் - விரைவுடையனாய். தொழு - வணங்கு. வாய்மையே - உண்மையாக. |