|
பொ-ரை: வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின், நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும். கு-ரை: எட்டவிட்ட - உயரமாக அமைத்த. இடுமணல் எக்கர் - காற்றாலும் அலையாலும் சேர்க்கப்பட்ட மணல் குன்றுகளின் மேல். பட்ட - மோதிய. நுண்துளி - நுண்ணிய தண்ணீர்த்துளி. அடைகிற்றிரேல் - அடைய வல்லீரேயானால். நம் வினை உள்ளன விட்டு வீடுமே - நம் வினையாக இருப்பவை நம்மைவிட்டுக் கெடும். |