|
பொ-ரை: உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன். கு-ரை: நடையை - உலக நடையை. மெய்யென்று - நிலையானது என்று எண்ணி, நாத்திகம் - கடவுளும் மறுபிறப்பும் இருவினையும் முதலியவற்றை இல்லை என்றுகூறும் உலோகாயதம். கடவுளும் உயிரும் வீடுபேறும் பொய்யென்று கூறும் கொள்கை. படைகள்போல் - நாற்பெரும்படைகளைப் போல். வரும் - கொல்லவரும். பஞ்சமா பூதங்கள் - ஐந்து பெரிய மண். நீர், அனல், கால், வளி, என்ற பூதங்கள். தன்னடைந்தார்க்குத் தடையொன்றும் இல்லாது அடைதற்கு எளிதாய் நிற்பான் என்க. |