|
பொ-ரை: ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று, பெரிய பாம்பும், மதியும், கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம். கு-ரை: ஒருத்தனாய் - அழியாத முதல்வன் தானொருவனுமேயாய். பருத்தபாம்பு - பெரிய பாம்பு. பொருத்தன் - அணிந்தவன். திருத்தன் - திருத்தமாய் விளங்குபவன். மாறுபடாத செம் பொருள். |