|
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! அமண்முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக. கு-ரை: மிண்டர் - வலிய சமணர். விரவியும் - கூடியும். வீறிலா - பெருமையில்லாத. குண்டர் - உடல் கொழுத்தவர் சமணர். கழிந்து - நீங்கி. உய்யபோந்து - உய்தற்பொருட்டு இறைவனிடத்து வந்து. என்றும் - நாடோறும். உண்டு - பணி செய்வதற்கென்றே உண்டு. பணிசெய் - தொண்டுசெய். |