பாடல் எண் : 33 - 5
ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டினாயொரு காதி விலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.
5
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினையணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.
கு-ரை: ஆட்டினாய் - திருக்கூத்தாடுபவனே! ஓட்டினாய் - விலகச்செய்தவனே!, வெண்தோட்டினாய் - ஒரு பக்கத்து வெண்மையான தோடணிந்தவனே!. நீட்டி - புகழ்களை நீளச் சொல்லிக் கொண்டு.